பாகுபலி நடிகர் ராணா தனது காதலி மிஹீகாவை சமீபத்தில் மணந்தார். கொரோனா லாக்டவுன் என்பதால் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். இந்நிலையில் ராணா தனது திருமண படத்தை இணைதளத்தில் பகிர்ந் தார். அதைப்பார்த்து பல விஐபிக்கள் அவருக்கு வாழ்த்து பகிர்ந்தனர்.
நடிகர் விஷ்ணுவிஷால் வித்தியாசமான வாழ்த்து பகிர்ந்தார். அதில் கூறும் போது, ’சில வருடங்களுக்கு முன் ஒருவர் என்னிடம் ஒருபோதும் திருமணமே செய்து கொள்ளமாட்டேன் என்றார். ஆனால் இன்று திருமண படத்தில் அழகாக உட்கார்ந்துக் கொண்டிருக்கிறார். திருமண வாழ்த்துக்கள். கடவுள் அருள் புரிவாராக. என்று குறிப்பிட்டிருந்தார்.
வார்த்தை தவறிவிட்டாய் கண்ணாம்மா பாணியில் ராணாவுக்கு விஷ்ணு விஷால் போட்ட வாழ்த்து கலகலப்பாக ரசிகர்க ளால் பகிரப்படுகிறது.

ராணாவும் விஷ்ணுவின் டிவிட்டை ரீட்விட் செய்து, ’அந்த வருஷமெல்லாம் மலையயேறிடுச்சி.. நன்றி’ எனத் தெரிவித்திருக்கிறார்.
விஷ்ணு விஷால் காண்டன், அரண்யா, ஜகஜால கில்லாடி, எப் ஐ ஆர், மோகன் தாஸ் போன்ற படங்களில் நடித்து வருகி றார். சமீபத்தில் இவர் நடித்த ராட்சசன் படம் கேரள டிவியில் ஒளிபரப்பானது. அதற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. அதையறிந்து விஷ்ணு விஷால்’இனி நான் எனது படங்களை கேரள ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையிலும் கதைகள் தேர்வு செய்வேன். தற்போது நடித்து வரும் படங்களும் அத்தகைய ஸ்கிரிப்ட் தான்’ என்றார்.

[youtube-feed feed=1]