மாஸ்கோ: ரஷ்ய நாடானது, உலகின் முதல் COVID-19 தடுப்பூசியை அறிமுகப்படுத்தியது. இது உண்மையில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்க்கலாம்.
உலகெங்கிலும் கொரோனா வைரஸ் எண்ணிக்கை ஆபத்தான விகிதத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதால், விஞ்ஞானிகளும், மருத்துவ நிபுணர்களும் மனித பயன்பாட்டிற்கு ஒரு தடுப்பூசியை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெவ்வேறு கட்டங்களில் 160 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அவர்களில் 27 பேர் மனித சோதனைகளை அடைந்துள்ளனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்து தயாரிப்பாளரான அஸ்ட்ராஜெனெகா ஆகியோரால் உருவாக்கப்பட்ட தடுப்பூசி முன்னணியில் இருப்பதாக கருதப்படுகிறது.
ஆனால் இன்று தனது கொரோனா வைரஸ் தடுப்பூசியை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடாக ரஷ்யா திகழ்கிறது. ரஷ்யாவின் கோவிட் தடுப்பூசி பதிவு செய்யப்பட்டது, புடினின் மகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. கொரோனா வைரஸ் தடுப்பூசியை பதிவுசெய்த ‘உலகின் முதல் நாடு’ என்ற பெருமையை ரஷ்யா பெற்றதால், தனது மகள்களில் ஒருவருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
தடுப்பூசி தேவையான அனைத்து சோதனைகளையும் தமது சோதனைகளை கடந்துவிட்டார், நன்றாக இருக்கிறார் மற்றும் அதிக எண்ணிக்கையிலான ஆன்டிபாடிகள் உருவாகி உள்ளன என்றும் அவர் மேலும் கூறினார். ரஷ்யாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசி பதிவு செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் தேசிய ஆராய்ச்சி மையம் மற்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உருவாக்கிய தடுப்பூசி,உலகின் முதல் கோவிட் -19 தடுப்பூசி’ என்று அறிவிக்கப்பட்டது ஆச்சர்யங்களை எழுப்பி உள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆகஸ்ட் 11, 2020 அன்று பதிவு செய்யப்பட்டுள்ளது, இது கொரோனா வைரசை எதிர்த்து போராடுவதற்கான தடுப்பூசியைப் பதிவுசெய்த உலகின் முதல் நாடாக ரஷ்யா திகழ்கிறது.
ரஷ்யாவின் தடுப்பூசி ஒரு அடினோவைரஸ் அடிப்படையிலான வைரஸ் தடுப்பூசி ஆகும். இது SARS-CoV-2 வைரஸின் ஸ்பைக் புரதத்துடன் இணைந்து உடலில் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகிறது. தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் பற்றிய சந்தேகங்களுக்கு பதிலளித்த தேசிய ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் அலெக்சாண்டர் ஜின்ட்ஸ்பர்க், தடுப்பூசியில் உள்ள கொரோனா வைரஸ் துகள்கள் பெருக்க முடியாததால் உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்று கூறினார்.
தொற்று நோய்களின் முன்னாள் தலைவரான அலெக்சாண்டர் செப்பர்னோவ் ரஷ்ய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தரவு குறித்து சந்தேகம் எழுப்பினார். தவறான தடுப்பூசி மூலம் நோயின் தீவிரத்தை அதிகரிக்கும் சாத்தியத்தின் அடிப்படையில் ஆபத்து உள்ளது. நோய்த்தொற்று தீவிரமடைய வாய்ப்பு எப்போதும் இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், “சில நோய்களுடன்-கொரோனா வைரஸுக்கு, சில ஆன்டிபாடிகள் இருப்பதால் தொற்று தீவிரமடையக்கூடும் என்பது ஏற்கனவே அறியப்பட்டுள்ளது. எனவே தடுப்பூசி எந்த ஆன்டிபாடிகள் உருவாகிறது என்பதை அறிய வேண்டும்.
பாதுகாப்பான மற்றும் பயனுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசியை தயாரிக்க ஏற்கனவே நிறுவப்பட்ட வழிகாட்டுதல்களின்படி தொடருமாறு உலக சுகாதார அமைப்பு கடுமையாக அறிவுறுத்தியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.