டில்லி
ஊரடங்கால் 80% கிராமப்புற மக்கள் பணியில் இருந்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் 68% மக்கள் அடிப்படை வசதிகளையும் இழந்துள்ளனர் என ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த நாடெங்கும் மார்ச் 25 முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. நாடெங்கும் அனைத்து வர்த்தகம் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதையொட்டி கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பல தினக்கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
ஊரடங்கு தாக்கம் குறித்த கணக்கெடுப்பு ஒன்றை லோக்நீதி சி எஸ் டி எஸ் மற்றும் கோவன் கனெக்ஷன் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து ஒரு கணக்கெடுப்பை நடத்தி உள்ளன. அகில இந்திய அளவில் நடந்த இந்த கணக்கெடுப்பில் மொத்த 25,300 பேர் நேரடியாகக் கலந்துக் கொண்டனர். இந்த கணக்கெடுப்பு பல தரப்பு பொருளாதார பிரிவினர் இடையே நடத்தப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பின் மூலம் கிடைத்த விவரங்கள் வருமாறு
கிராமப்புறங்களில் 80% மக்கள் பணியில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு பணி இழந்ததால் சுமார் 68% மக்கள் தங்கள் அடிப்படை வசதிகளை முழுவதுமாக இழந்துள்ளார். மொத்தத்தில் 605 தொழிலாளர்கள் தங்கள் வருமானத்தை முழுவதுமாக இழந்துள்ளனர்..
கடந்த ஆட்சியின் போது மன்மோகன் சிங் அமல்படுத்திய மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம் எனப்படும் 100 நாள் கட்டாய வேலைத்திட்டம் பலருக்கு உதவியாக இருந்துள்ளது.
கணக்கெடுப்பில் கலந்துக் கொண்ட 20% பேர் இந்த திட்டத்தின் மூலம் ஓரளவு சமாளித்துள்ளனர். இதைத் தவிர 23% மக்கள் கடன் வாங்கி காலத்தை ஓடி உள்ளனர். அத்துடன் 71% பேர் அரசின் ரேஷன் ,மூலம் பயன் அடைந்துள்ளனர்
அதே வேளையில் இத்தனை துயரம் மற்றும் பணி இழப்பு இருந்தாலும் நான்கில் மூவர் மோடி அரசு இந்த கொரோனா கட்டுப்படுத்தும் நடவடிக்கை திருப்திகரமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் 40% பேர் கிராமப்புறங்களில் மருத்துவ வசதி பற்றாக்குறை உள்ளதாக தெரிவித்துள்ளனர்.