வெளிநாட்டில் இருந்தபடியே உள்ளூர் தேர்தலில்  வாக்களிக்கலாம்..

மத்திய தேர்தல் ஆணையம் படிப்படியாகத் தேர்தல்  சீர் திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது.

மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டதை முக்கியமான சீர்திருத்தமாகச் சொல்லலாம்.

இப்போது , வாக்களிப்போர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், ஒருவர் வெளிநாட்டில் இருந்தாலும், உள்ளூர் தேர்தலில் வாக்களிக்க வகை செய்யும் ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது.

இது குறித்து இந்தியத் தேர்தல் ஆணைய பொதுச்செயலாளர் உமேஷ் சின்ஹா, காணொலி காட்சி மூலம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய போது தெரிவித்த  தகவல் இது:

‘’எவ்வளவு முயற்சிகளை மேற்கொண்டாலும் பொதுத்தேர்தலில்  வாக்குப்பதிவு 67 சதவீதத்தைத் தாண்டுவதில்லை.

பல்வேறு காரணங்களால் தங்கள் தொகுதியை விட்டு இடம் பெயர்ந்து ,வாக்காளர்கள் வேறு இடங்களில் வசிப்பதே இதற்குக் காரணம்.

தேர்தல் நடவடிக்கைகளில்  அடிப்படை மாற்றம் செய்தாலன்றி, வாக்குப்பதிவை அதிகரிப்பது சாத்தியம் இல்லை.

ஒருவர் வெளிநாட்டில் இருந்தாலும் அங்கிருந்த படி தேர்தலில் வாக்களிக்கும் முறையைச் செயல் படுத்த வேண்டும்.’’

மேற்கண்டவாறு,  உமேஷ் சின்ஹா, தனது ஆதங்கத்தைத் தெரிவித்த நிலையில், இந்த காணொலி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐ.ஐ.டி இயக்குநர்கள் பலர்,, தொலைவில் இருந்தபடி ஒருவர் உள்ளூரில் வாக்களிக்கும் முறையைச் செயல்படுத்துவது குறித்த தொழில்நுட்ப  விளக்கங்களைப்  பதிவு செய்தனர்.

-பா.பாரதி.