புதுடெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரனாப் முகர்ஜிக்கான மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால், தற்போது அவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது 84 வயதாகும் முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு, மூளையில் உறைவு கண்டறியப்பட்டு, அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்றும் உறுதிசெய்யப்பட்டது.
தற்போது, அவருக்கு மூளை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வருவதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவித்துள்ளன. டெல்லியின் ராணுவ ஆர் & ஆர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டவுடன், தன்னுடன் கடந்த ஒருவாரத்தில் தொடர்பில் இருந்த அனவைரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவர் டிவிட்டரில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.