ஜகாத்தா: இந்தோனேசியாவில் சினாபங் எரிமலை வெடித்ததில் 30000 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்னர்.
இந்தோனேசியாவில் ஏராளமான எரிமலைகள் உள்ளன. அவற்றில் 120 எரிமலைகள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் தன்மை கொண்டவை. அதிலும் 400 ஆண்டுகள் பழமையான சினாபங் என்ற எரிமலை அவ்வப்போது வெடித்து அச்சுறுத்தி வருகிறது.
2010ம் ஆண்டு வெடித்த போது 2 பேர், 2014-ல் 16 பேர், 2016ல் 7 பேர் உயிரிழந்தனர். இப்போது இந்த எரிமலையானது சில நாட்களாக குமுறிக் கொண்டிருந்தது. ஆகையால் எப்போது வேண்டுமானாலும் எரிகுழம்பை கக்கலாம் என்பதால், 5 கி.மீ பரப்பவில் 30,000 மக்கள் முன்னெச்சரிகையாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
எதிர்பார்த்தபடியே சினாபங் எரிமலை திடீரென வெடித்து எரிகுழம்பை கக்கியது. அப்போது எழுந்த சாம்பல் துகள்கள் 16,400 அடி உயரத்திற்கு பறந்தன.இதேபோன்று, மவுண்ட் மெரபி எரிமலை சீற்றத்துடன் வெடித்ததால் அங்கு ரெட் அலர்ட் விடப்பட்டது. 2010ம் ஆண்டு மெரபி எரிமலை வெடித்ததில் 350 பேர் பலியாகியது, குறிப்பிடத்தக்கது.