இந்தி நடிகர் சுஷாந்த் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இதுபற்றி மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. இந்நிலையில் சுஷாந்த் தந்தை கே கே சிங் பாட்னா போலீசில், காதலி ரியா தான் சுஷாந்த் தற்கொலைக்கு காரணம். அதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று புகார் அளித்தார். இதுபற்றி விசாரிக்க பாட்னா போலீஸ் மும்பை அந்தபோது அந்த அதிகாரிகளை கொரோனா முகாமில் வலுக்கட்டாயாமாக அடைக்கப்பட் டனர். இதையடுத்து மும்பை, பாட்னா போலீஸுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் சுஷாந்த், ரியா தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று பீகார் போலீசார் சிபாரிசு செய்தனர். அதை ஏற்று சிபிஐ விசாரணை மேற்கொண்டது. அதற்கு மகாராஷ்டிரா அரசின் மும்பை போலீஸ் எதிர்ப்பு தெரிவித்திருக் கிறது.
இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டில் மும்பை பாந்த்ரா போலீஸ் இன்ஸ்பெக்டர் பூஷண் பெல்னேக்கர் சுப்ரீம் கோர்ட்டில் பிரமாணபத்திரத்தை வழக்காக தாக்கல் செய்திருக்கிறார்.
அதில் கூறியிருப்பதாவது:
சுஷாந்த் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோட்டில் நிலுவையில் உள்ளது. மேலும் சுஷாந்த் தற்கொலை சம்பவம் நடந்தது மராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியில்தான், பாட்னா போலீஸ் எல்லைக்குள் இந்த வழக்கு வராது அப்படி யிருக்கும்போது பாட்னா போலீஸ் சிபாரிசை ஏற்று சிபிஐ இந்த வழக்கை விசாரிப்பது சரியல்ல. அதற்கு தடை விதிக்க வேண்டும். இதற்கு அனுமதி தந்ததால் ஆங்காங்கே இதுபோல் வழக்குகள் தங்கள் இஷ்டத்து தொடர்வதற்கு முன்னுதாரணமாகிவிடும்.
இவ்வாறு மும்பை பாந்த்ரா காவல் துறை பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.