கோழிக்கோடு: கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார்.
கொரோனா பொது முடக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை “வந்தே பாரத்” திட்டத்தின் கீழ் சிறப்பு விமானங்கள் மூலம் இயக்கி அழைத்து வரப்படுகிறது. இந்த நிலையில், நேற்று துபாயில் இருந்து 10 குழந்தைகள் உள்பட 184 பேருடன் கேரளா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பி ரஸ் விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், 2 விமானிகள் உட்பட 18 பேர் உயிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வ செய்ய மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கேரளா விரைந்தார். அங்கு இன்று காலை விபத்து நடைபெற்ற இடத்தில் ஆய்வு நடத்தினார். அங்குள்ள அதிகாரிகளிடம் விபத்து குறித்து ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து, விபத்தில் காயம் அடைந்தவர்களக்கு உயர்தர சிகிச்சை அளிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விபத்துக்குள்ளான விமானத்தில் 190 பேர் பயணம் செய்ததாகவும், இதில் 2 விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தவர், 149 பேல் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 23 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.
விமான விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் அறிவித்தார். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம், சிறு காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.