Patrikai.com official YouTube Channel
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்

கடந்த 3ஆம் தேதி ராமேஸ்வரம் பகுதியில் இருந்து சுமார் 600க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றன. அவர்களில் பெரும்பாலோர் மீன்களைபிடித்துக்கொண்டு நேற்று (4ந்தேதி) கரை திரும்பினர்.
ஆனால், ராமேஸ்வரம் அருகே உள்ள மீன்வளத்துறையிடம் அனுமதிச் சீட்டு பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று நேற்று (ஆகஸ்ட் 4) கரை திரும்பினர்.
இந்நிலையில், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களும், அவர்கள் சென்ற படகும் திரும்பவில்லை என்று கூறப்படுகிறது. பாக்கியம் என்பவருக்குச் சொந்தமான படகில் திரவியம், வப்பா, முனியசாமி, சவரியா, மெல்டன் உள்பட 7 மீனவர்கள் மீன்பிடிக்க சென்ற நிலையில், அவர்கள் கரை திரும்பாதது குறித்து, ராமேஸ்வரம் உதவி மீன்வளத்துறை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.