திரிபுரா:
கொரோனா அறிகுறி இருப்பதால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதாக திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தனது குடும்பத்தை சேர்ந்த இருவருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து தனக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதையறிந்து உடல் பரிசோதனை செய்து கொண்டுள்ளதாகவும் அதன் முடிவு இன்னும் வரவில்லை எனவும் திரிபுரா முதலமைச்சர் கூறியுள்ளார். இதனால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]