கொரோனா ஊரடங்கில் மக்கள் படும் அவஸ்த்தையை பற்றி பாடல் வடிவில் ஆடியோ வெளியிட்டிருக்கிறார் நடிகர் மன்சூர் அலிகான். அதில், ’தொல்லைய நீக்கு எல்லைச்சாமி வாழவிடு பழனிச்சாமி’ என்று தெரிவித்துள்ளார்.


கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் தங்கம்விலை உயர்வது ஏன்? என்று விளக்கம் கூறி பாடியிருக்கிறார். அந்த படல் இதுதான்.
கொரோனவ உள்ள விட்டவனுக்கு இங்கு லாபமோ லாபம்.
மக்களுக்கு இங்கு நஷ்டம் நஷ்டம் கஷ்டமோ கஷ்டம்
கையை கழுவி சோப்பு போட்டு அங்கவை சங்கவை ஆக பழகலாம்
கொரோனவை சின்ன வீடா வெச்சுக்கலாம்
மக்களாட்சியின் சொன்னாங்க ஓட்டு வாங்கி போனாங்க
பதவியில் உட்கார்ந்ததும் போலீசை வைச்சி ஆளுறாங்க
குனிஞ்சு கும்பிடு போட்டு குடிசைக்குள்ள வந்தாங்க
குடிமக்களே கும்பல் கும்பலா சுட்டு சுட்டு தள்றாங்க
கொள்கைக்கு தீயை வெக்கிறாங்க குடிசைக்கு தீ வெக்கிறங்க
மாநாடுக்கு வண்டியை கட்டி கூட்டம் கூட்டமாக கூப்பிடாங்க இப்ப தள்ளி இரு, தனியாய் இரு வீட்டிலிருன்னு சொல்றாங்க
கந்தனுக்கு வேல் வேல் முருகனுக்கு வேல் வேல்
அல்லா அல்லா அல்லா அல்லா
தனியார் ஆஸ்பத்திரி பீஸ்பத்திரியா மாறிப்போச்சு 20 லட்சம் கொடுன்னு இழுத்து வச்சி புடுங்கு றாங்க
அரசாங்க ஆஸ்பத்திரிகளில் முட்டையும் சுண்டலும் கொடுக்குறாங்க
சாப்பாடு கசாயம் போட்டு கொரோனவா வெறட்டுறாங்க
சளிக் காய்ச்சல் இருமலுக்குள்ள கொரோனவா கண்டுபிடிச்சவன கொண்டு வந்து மாலைய போடு காவடியாடு
காத்தவராய வானவராயா ஐயனாரே ஐயப்பமாரே தொல்லைய நீக்கு எல்லைச்சாமி வாழவிடு பழனிச்சாமி
பவுனு விலை 40,000 பொண்ண பெத்தவன் என்ன செய்வான்
மத்திய சர்க்கார் காட்டாட்சி தான் நடக்குது அமெரிக்க தேர்தலுக்காக தங்கம் விலையயேற்றி விட்டது
ரூபாயை சரிக்கட்டதான் மக்களை போட்டு மிதிக்குது
ஒ ஜீசஸ் அல்லேலூயா இந்த பாவிகள மன்னிப்பாயா
இந்தியாக்கு கொரானா கூட்டிவந்த டிரம்பு, மோடியை மன்னிப்பாயா
அய்யாமாரே அம்மாமாரே மாட்டிக்கொண்டு முழிக்குமாரே
ஆளும் மத்திய அரசால் இங்கே வாழ்க்கைப
பிஞ்சிருச்சி விளக்குமாரே
தூங்கி எந்திரிச்சா புதுப் புது சட்டம் மாநில உரிமை எல்லாம் மட்டம்
நாட்டடைய ஜெயிலா மாத்திபோட்டு
மக்களை போராடமா வீட்டுக்குள்ள போட்டு மலைகளை குடைஞ்சி ஆலைகளை அழிச்சு பூமியை கந்தரகோலம் பண்ணி கனிமங்களத்தான் கொள்ளை அடிக்கிறான்
அடிச்சி அடிச்சி விக்க பார்க்கறான்
விக்கிறான் விக்கிறான் நாட்டை கூறுப்போடு விக்கிறான்
என்று பாடயிருக்கும் மன்சூர் அலிகான். இறுதியில் அரசுக்கு வேண்டிகோள் வைத்திருக்கிறார். ’ தமிழ னாக இந்தியனாக இந்திய அரசுக்கு ஒரு வேண்டு கோள். நாடு முழுக்க ஊரடங்கு பிறப்பித்துவிட்டு பண்டிகைகள் கூட கொண்டாட விடாமல் செய்து விட்டு, வருமானம் பிழைப்பு அனைத்தையும் அடைத்து விட்ட நிலையில், எந்த சட்டமும் இ ஐ ஏ உட்பட அமல்படுத்தக் கூடாது.
ஊரடங்கு என்றால் எல்லோருக்கும் தான் சட்டசபை, பாராளு மன்றம் அனைத்தும் அதில் அடக்கமாக இருக்க வேண்டும். மக்களை அடிமைப்படுத்தி எந்த சட்டங்களையும் நிறைவேற் றக் கூடாது’ என்பது எனது பணிவான வேண்டுகோள்.
முன்னதாக கொரோனா பாடலின் தொடக்கமாக நாட்டுபுற மருந்துகள் பற்றி ஒரு பாடல் பாடியிருக் கிறார். அதில் கூறியிருப்பதாவது:
புத்தி உள்ளவனுக்கு இங்கே புழக்கடையில் மருந்து. மூளைக்கு வல்லாரை
கல்லீரலுக்கு கரிசாலை, காமாலைக்கு கீழாநெல்லி வாய் புண்ணுக்கு மணத்தக்காளி
காய்ச்சலுக்கு நிலவேம்பு,
கறிவேப்பிலை முருங்கைய காய்ச்சி குடிச்சவனுக்கு வாழ்நாளெல்லாம் விருந்து.
சளி வறட்டு இருமல் போக ஆடாதோடை..
என மூலிகை பெயர்கள் சொல்லி அது தீர்க்கும் நோயையும் சுருக்கமான நடையில் பாட்டாக பாடி உள்ளார் ’ மன்சூர் அலிகான்.