சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,57,613 ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனா பாதிப்பு 1,01,951 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 87,604 பேர் தொற்று பாதிப்பில் இருந்து விடுதலையாகி உள்ளனர். தற்போதைய நிலையில் 12, 190 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2157 பேர் பலியாகி உள்ளனர். நேற்று மட்டும் 12. 426 பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் கொரோனாபாதிப்பு விவரம்…
ராயபுரத்தில், தொற்றால் பாதிக்கப்பட்ட, 11 ஆயிரத்து, 321 பேரில், 10 ஆயிரத்து, 244 பேர் குணமாகினர். தவிர, 817 பேர் சிகிச்சை பெறும் நிலையில், உயிரிழப்பு, 260 ஆக உள்ளது.
அண்ணாநகரில், 11 ஆயிரத்து, 565 பேரில், 10 ஆயிரத்து, நான்கு பேர் குணமாகியுள்ளனர். 1,327 பேர் சிகிச்சை பெறும் நிலையில், உயிரிழப்பு, 234 ஆக உள்ளது. இதன் மூலம், குணமடைந்தோர் எண்ணிக்கையில், 10 ஆயிரத்தை கடந்த மண்டலங்களின் எண்ணிக்கை, இரண்டாக உயர்ந்தது.
கோடம்பாக்கத்தில், 11 ஆயிரத்து, 700 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதில், 9,962 பேர் குணமடைந்த நிலையில், 1,511 பேர் சிகிச்சை பெறுகின்றனர். உயிரிழப்பு, 227 ஆக உள்ளது.
தேனாம்பேட்டையில், 10 ஆயிரத்து, 892 பேரில், 9,623 பேர் குணமான நிலையில், 943 பேர் சிகிச்சை பெறுகின்றனர். தவிர, 326 பேர் இறந்தனர்.
மாநகராட்சிலேயே, தொற்றால் பாதிக்கப்பட்டு, இறந்தவர் எண்ணிக்கையில், இது முதலிடமாகும்.
தண்டையார்பேட்டையில், தொற்று பாதிப்பு சமீபமாக, குறைந்துள்ளது. அதன்படி, அங்கு பாதிக்கப்பட்ட, 9,610 பேரில், 8,742 பேர் குணமாகினர். தவிர, 626 பேர் சிகிச்சை பெறும் நிலையில், உயிரிழப்பு, 242 ஆக உள்ளது.