பெங்களூரு

ர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் ஊரடங்கு அமல் செய்யப்பட்டது.

ஆனால் கொரோனா கட்டுக்குள் வராததால் அம்மாநில முதல்வர் எடியூரப்பா ஊரடங்கை ரத்து செய்தார்.

ஆகஸ்ட் 1 முதல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர மற்ற இடங்களில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதற்குப் பிறகு கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்க ஆரம்பித்தது.

இந்நிலையில் முதல்வர் எடியூரப்பாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து எடியூரப்பா தனது டிவிட்டர் பக்கத்தில்.

எனக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நான் தற்போது நலமுடன் உள்ளேன்.

மருத்துவர்களின் அறிவுரையின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.

கடந்த சில நாட்களாக என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் சுய தனிமைப்படுத்தலை பின்பற்றிக் கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்

எனப் பதிந்துள்ளார்.