சுஷாந்த் மர்ம மரணம் : உத்தவ் தாக்கரேக்கு மாஃபியா கும்பல் மிரட்டலா?
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், மும்பையில் தனது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் , தினம் தோறும் புதுப்புது சர்ச்சைகளைக் கிளப்பிய வண்ணம் உள்ளது.
சுஷாந்த் தற்கொலைக்கு, அவருடன் ’’குடும்பம்’’ நடத்திய நடிகை ரியா மீது சுஷாந்த் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் மகாராஷ்டிர முதல் –அமைச்சர் உத்தவ் தாக்கரே,’’ இந்த வழக்கை மும்பை போலீசாரே விசாரிப்பார்கள். சுஷாந்த் மரணத்தை அரசியலாக்க வேண்டாம்’’ எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பீகார் மாநில பா.ஜ.க..துணை முதல் –அமைச்சரான சுஷில் மோடி’’ சுஷாந்த் வழக்கில் இந்தி சினிமாவின் மாஃபியா கும்பல் அழுத்தத்துக்கு உத்தவ்தாக்கரே பணிந்து விட்டார்’’ எனப் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்
‘’மாஃபியா கும்பல் நிர்ப்பந்தம் காரணமாக நிஷாந்த் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகளை காப்பாற்ற தாக்கரே முயற்சி செய்கிறார்’’ என்றும் அவர் புகார் தெரிவித்துள்ளார். .
‘’இந்த தற்கொலை குறித்து நடிகை ரியாவிடம் விசாரணை நடத்தச் சென்ற பீகார் போலீசாரை, மும்பை போலீசார் அனுமதிக்காதது ஏன்?’ எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார், சுஷில் மோடி.
– பா.பாரதி.