விசாகப்பட்டினம்: ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் சரக்குகளை கையாளும் கிரேன் கீழே விழுந்ததில் 10 பேர் பலியாகினர்.
விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் துறைமுகத்தில் கிரேன் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த துறைமகத்தில் சரக்குகளை கையாளும் 60 அடி உயரமுள்ள ராட்சத கிரேன் திடீரென சரிந்து கீழே விழுந்தது.
இந்த விபத்தில் 10 பேர் பலியாகினர். மேலும் பலர் இடிபாடுகளின் உள்ளே சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சரக்குகளை ஏற்றி, இறக்கும் போது ராட்சத கிரேனின் கேபிள் அறுந்ததால் விபத்து நிகழ்ந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மால்காபுரம் காவல்துறை ஆய்வாளர் குணதுர்க பிரசாத் கூறி உள்ளார்.
இடிபாடுகளில் பலரும் சிக்கிஉள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. அதன் பிறகே இறுதியான பலி விவரங்கள் பற்றி தெரிய வரும்.