டெல்லி: டெல்லியில் 24 மணி நேரத்தில் 1,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: டெல்லியில் 24 மணி நேரத்தில் 1,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 1,35,598 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் 27 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,963 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,195 பேர் கொரோனா சிகிச்சை பெற்று குணம் அடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,20,930 ஆக உள்ளது. மருத்துவமனைகளில் தற்போது 10,705 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சையில் உள்ளதாக அந்த அறிக்கையில் டெல்லி சுகாதாரத்துறை கூறி உள்ளது.
Patrikai.com official YouTube Channel