ஈரோடு:
மத்தியஅரசு நடைமுறைப்படுத்திஉள்ள புதிய கல்விக் கொள்கை குறித்து வரும் 3ம் தேதி முதலமைச்சர் உடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டைன் ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு மாவட்டம் வரப்பாளையத்தில் அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளை ஆய்வு செய்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது,
புதிய கல்விக்கொள்கை குறித்த முழு அறிக்கை பெற்ற பிறகு முதல்வர் ஆலோசித்து முடிவு செய்வார் என்றார்.
ஆகஸ்ட் 1 மற்றும் 2-ம் தேதி விடுமுறை தினமாக இருப்பதால் தொலைக்காட்சி மூலம் பாடம் நடத்துவது வரும் 3ம் தேதி திங்கட்கிழமை தொடங்கப்படும்.
அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்து முதல்வர் பழனிசாமி 2 வாரத்தில் அறிவிப்பார்.
அதே நேரத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த பின்பே பள்ளி திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்.
இவ்வாறு கூறினார்.
புதிய கல்விக்கொள்கை குறித்து கூறிய கல்வித்துறை அதிகாரிகள், இதில், தமிழகத்திற்கான சாதக, பாதக அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகவும், மத்திய அரசு அறிவிப்பை அப்படியே ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது, முழுமையாக விவாதித்த பிறகு முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்து உள்ளனர்.