சென்னை:
மிழகத்தில்  ஆகஸ்டு 31ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் 6வது கட்ட தளர்வுகளுடனான ஊரடங்கு ஜூலை 31ந்தேதி (நாளை) உடன் முடிவடைய உள்ள நிலையில், மேலும் ஒரு மாதம் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
அனைத்து தரப்பினரும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இ.பாஸ் நடைமுறையில் எந்தவித தளர்வும் அளிக்கப்படாமல் தற்போதையை நடைமுறையே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து நேற்று மாவட்ட ஆட்சியர்களுடனும், இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார்.
அடிதத்தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி, ஆகஸ்டு 31ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக  தெரிவித்து உள்ளது.
ஆகஸ்டு மாதம் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு
சென்னையில் ஆகஸ்ட் 1 முதல் சென்னையில் தனியார் தொழில் நிறுவனங்கள் 75 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்
சென்னையில் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி
சென்னையில் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவருந்த அனுமதி
ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ரூ.10ஆயிரத்திற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதி
மாநகராட்சி பகுதிகளில் உள்ள எந்த கோவில், மசூதி, தேவாலயங்களில் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை
சென்னையில் காய்கறி, மளிகை கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நேரம் இரவு 7மணி வரை நீட்டிப்பு
சென்னையில் மற்ற கடைகளும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நேரம் இரவு 7மணி வரை நீட்டிப்பு
அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற என அனைத்து பொருட்களையும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய அனுமதி
சென்னை தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பேரூராட்சி, நகராட்சிகளில் உள்ள சிறிய கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களை திறக்க அனுமதி
ரயில், விமானப் போக்குவரத்தில் தற்போதைய நிலை தொடரும் ரயில், விமானப் போக்குவரத்தில் தற்போதைய நிலை தொடரும்
இ-பாஸ் நடைமுறையும் தொடரும்
ஆகஸ்ட் 15ம் தேதி மத்திய அரசின் வழிகாட்டுதல்படி சுதந்திர தினம் கொண்டாடப்படும்