பாட்னா: பீகார் மாநிலத்தில் மேலும் 16 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய 6ம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. ஆகஸ்டு 1ம் தேதி முதல் 16 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக பீகார் மாநில அரசு அறிவித்துள்ளது.
3 வாரங்களாக மாநிலத்தில் நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக பீகார் அரசு அறிவித்து இருக்கிறது. ஊரடங்கு சமயத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், அரசு, அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவித பணியாளர்களுடன் இயங்கலாம் என்றும் மத வழிபாட்டு தலங்கள் திறக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.