சென்னை:
ரசு பள்ளிகளில் ஆகஸ்டு 3ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என செய்தி வெளியான நிலையில், தற்போது அரசு பள்ளிகளில்  மாணவர் சேர்க்கை இல்லை என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் மீண்டும்  மக்களை குழப்பி உள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக தடுக்க ஊரடங்கு நடவடிக்கையாக   நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மேலும், பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதையடுத்து,  பெரும்பாலான தனியார் பள்ளிகள், ஆன்லைன் மூலம் கல்வி போதிக்க தொடங்கி உள்ளது. இதனால் ஏழை மக்கள் அரசு பள்ளிகளில் எப்போது மாணவர் சேர்க்கை நடைபெறும், எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர். பள்ளிகளுக்கு சென்று விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3 -ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என கடந்த வாரம்  தகவல் வெளியானது. தற்போத அதுவும் இல்லை என்று அமைச்சர் மறுத்துள்ளார்.
ஏற்கவே ,பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களுடன் ஆலோசனை செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அதையும் நடைமுறைப்படுத்த வில்லை.
அதுபோல   ஆன்லைன் வழிக் கல்வி விவகாரத்திலும்  நாள்தோறும் மாறுபட்ட தகவல்களை தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில் ஜூ 13ம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கப்படும் என்றார். பின்னர் சில நாட்களில்,  ஆன்லைன் கல்விக்கு வாய்ப்பு இல்லை என்று பல்டியடித்துடன்,  டிவி சேனல்கள் மூலம் கல்வி போதிக்கப்படுவதாக நேரப்பட்டியலையும் வெளியிட்டார்.
ஆனால், அதுவும் நடைமுறைக்கு வராத நிலையில், ஆகஸ்டு 3ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை அறிவிக்கப்படும் என அறிவித்தார்.

தற்போது அதுவும் இல்லை என்ற தெரிவித்து உள்ளார். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை என்று வெளியான செய்தி தவறானது என செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துஉள்ளார்.

மேலும், தனியார் பள்ளிகள் மதிப்பெண் பட்டியல் விளம்பர பலகை வைக்கக் கூடாது, அப்படி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  என தெரிவித்து உள்ளார்.
கடந்த சில நாட்களாக அரசு பள்ளிகளில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக அரிசி பருப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், அவர்களிடம் மாணவர் சேர்க்கை ஆகஸ்டு 3ந்தேதி தொடங்குவதாக ஆசிரியர்கள் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில், தற்போது மாணவர் சேர்க்கை இல்லை என்று அமைச்சர் கூறியிருப்பது மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.
மாணவர்களின் எதிர்கால விஷயத்தில், அவ்வப்போது மாற்றி மாற்றி பேசி, மக்களை குழப்பி வரும் அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தின் கல்வித்துறைக்கு  அமைச்சராக இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு  என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.