சென்னை:
சுற்றுச்சூழல் சட்டம் குறித்து விமர்சித்த இளம்பெண்ணின் அட்ரஸ் கேட்டும் டிவிட்டரில் பாஜக பிரமுகரான கல்யாண் மிரட்டி வருவது சமூகவலைதள வாசிகளை கொந்தளிக்க செய்துள்ளது.
இந்தியாவை சுடுகாடாக மாற்றும் இஐஏ 2020 டிராப்ட் அதாவது மத்தியஅரசின் புதிய “சுற்றுச்சூழல் வரைவு அறிக்கையை மத்தியஅரசு வெளியிட்டு உள்ளது. இந்த வரைவு அறிக்கை சட்டமாக்கப்பட் டால், இந்தியா சுடுகாடாக மாறி விடும் என்பதில் ஐயமில்லை. இது தொடர்பாக பொதுமக்களி டையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இளம்பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
மக்கள் கொரோனா பீதியில் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ள நிலையில், அசவுபடாமல், புதிய விதிகளை உருவாக்கி மக்களை புதைக்குழிக்குள் தள்ள மோடி அரசு திட்டமிட்டு இருக்கும் அதிர்ச்சி தகவல் அந்த விடியோ மூலம் வெளியாகி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், தமிழக பாஜகவை சேர்ந்த கல்யாண் என்பவர், EIA பற்றி பேசிய இளம்பெண்ணின் விலாசம் கேட்டு, டிவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளது நெட்டிசன்களை கொந்தளிக்க செய்துள்ளது.
பாஜக கல்யாண் தனது டிவிட்டர் பக்கத்தில் பல பதிவுகளை போட்டுள்ளர். அதில்,
நல்ல மேக்கப், பேக்ரவுண்ட் மியூசிக், பின்னாடி நாலு பிளைவுட் வச்சு எதோ வீட்டில் இருந்து பேசினா மாதிரி ஜோடனை, முன்னபின்ன தெரியாத சப்ஜெக்ட்டை பேசினாலும் தெளிவா பேசுவது போல பிரமை, கடைசியா வாழ்க பாரதம் வாழ்க இந்தியா என்று தேசாபிமானி வேடம்.
EIA பற்றி பேசிய அந்த பெண்ணின் பெயர் மற்றும் விலாசம் மொபைல் நம்பர் ஆகியவை தேவை யாரிடமாவது இருந்தால் என்னுடைய இன்பாக்ஸில் பகிரலாம்
EIA பற்றி ஒரு பெண்ணை பேச வைத்து நாடகம் ஆடுகிறது திமுக. எழுதிக் கொடுத்த விஷயத்தை மேடைப்பேச்சு போல அழகாக படித்து நடித்த அந்த பெண் பேசிய பேச்சில் 83 பக்க சட்ட நகலை படித்ததற்கான அறிவுப் பூர்வமான வாதங்கள் /ஆதாரங்கள் எதுவுமே அதில் இல்லை.
கல்யாணின் இதுபோன்ற பதிவுகளுக்கு நெட்டிசன்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஊரடங்கை தக்க சமயமாக பயன்படுத்தி மத்திய மோடி அரசு வளர்ச்சியின் பெயரால், நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்ல அடித்தளம் அமைக்கும் வகை செயல்பட்டு வருகிறது என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
சுற்றுச்சூழல் வரைவு அறிக்கை 2020க்கு எதிராக டிவிட்டரில் #scrapEIA2020, #WithdrawEIA2020 போன்ற ஹேஸ்டேக் டிரெண்டிங்காகி வருகிறது.