சென்னை:
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கந்தசஷ்டி பாராயணம் செய்த வீடியோவை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு எம்மதமும் சம்மதம் எனத் தெரிவித்துள்ளார்.

 

மேலும் ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு. எம்மதமும் சம்மதம். ”வருடந்தோறும் கார்த்திகை மாதம் 6 நாட்களும் கந்தர் சஷ்டி விரதம் இருப்பது எங்கள் வழக்கம். இன்று ஆடி மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கந்தசஷ்டி கவசம் படித்தேன் ” என விஜயகாந்த் தனது ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், # தமிழ் கடவுள் முருகனுக்கு அரோகரா என்ற ஹேஷ்டேக்கையும் இணைத்துள்ளார்.

முன்னதாக,நடிகர் ரஜினிகாந்துக்கும் கடும் கண்டனம் தெரிவித்து ட்விட்டர் பதிவு ஒன்றை சில தினங்களுக்கு முன் வெளியிட்டிருந்தார். தமது அந்தப் பதிவின் முடிவில், “கந்தனுக்கு அரோகரா… .எம்மதமும் சம்மதம்” என்று ரஜினி குறிப்பிட்டிருந்தார்.இந்த நிலையில், நடிகர் விஜயகாந்த், கந்த சஷ்டி கவசம் படிக்கும் வீடியோ அவரது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது.