ஜெயலலிதா வீட்டில் 8 ஆயிரம் புத்தகங்கள்..

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை போயஸ்கார்டனில் உள்ள வேதா நிலையத்தில் சுமார் 40 ஆண்டுகள் வசித்து வந்தார்.

ஜெயலலிதாவின் வீடு ,அ.தி.மு.க.வினருக்கு ஓர் ஆலயம்.

அந்த இல்லத்தை அரசுடைமை ஆக்கியுள்ளது, தமிழக அரசு .

அந்த இல்லத்தில் உள்ள அசையும் சொத்துக்கள் மற்றும் அசையா சொத்துக்கள் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.

அசையும் சொத்துக்களில் குறிப்பிடத்தகுந்தது, அங்குள்ள நூல்கள்.

ஜெயலலிதா வீட்டில் 8 ஆயிரத்து 376 புத்தகங்கள் உள்ளன.

11 டெலிவிஷன் பெட்டிகள், 38 ஏர்கண்டிஷனர்கள், 29 தொலைபேசி மற்றும் செல்போன்கள், 10 ரெப்ரிஜிரேட்டர்கள், 6 கடிகாரங்கள் போன்ற  ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்களும் அங்கு உள்ளன.

அசையும் சொத்துக்களில் அதிக எண்ணிக்கையில் இருக்கும் பொருட்கள் என்று பார்த்தால் சமையல் பாத்திரங்கள் தான்.

ஜெயலலிதா வீட்டில் உள்ள சமையல் பாத்திரங்களின் எண்ணிக்கை மட்டும் – 6 ஆயிரத்து 514.

அசையாத சொத்துக்கள் (அதாவது பிரித்து வேறு இடத்துக்குக் கொண்டு செல்லமுடியாதவை)  பட்டியலில் மூன்று மாடிக் கட்டிடங்கள் பிரதானமானவை..

2 மா மரங்கள், 5 தென்னை மரங்கள், 5 பனை மரங்கள் போன்ற அசையா சொத்துக்களும் போயஸ் தோட்டத்தில் உள்ளன.

-பா.பாரதி