சென்னை: அதிமுகவில் நிர்வாகிகள் பலரை மாற்றம் செய்து தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அமமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த இசக்கி சுப்பையா அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
அதிமுகவிற்கு கூடுதல் தலைமை கழக நிர்வாகிகள், துணை நிர்வாகிகள் பல பொறுப்புகளுக்கு நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
அமைப்புச் செயலாளர்களாக 11 பேரை நியமித்து அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது. கொள்கை பரப்பு துணைச் செயலாளராக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பாப்புலர் முத்தையா, நடிகை விந்தியா ஆகியோர் கொள்கை பரப்பு துணைச் செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அமைப்புச் செயலாளர்களாக முன்னாள் அமைச்சர்கள் இசக்கி சுப்பையா, புத்திச்சந்திரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
நிர்வாக வசதியை கருத்தில் கொண்டு மாவட்டங்கள் அமைப்பு ரீதியாக பிரிக்கப்படுகிறது என்றும், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதிமுக நிர்வாகிகள் மாற்றம் தொடர்பான பட்டியல் விவரம்:





Patrikai.com official YouTube Channel