இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ். தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றது. இதை மையமாக வைத்து, ’83 என்ற பெயரில் பிரம்மாண்டமாக இந்திப் படம் ஒன்று உருவாகி வருகிறது.
இந்த படத்தில் கபில் தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்க, நடிகர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வேடத்தில் தமிழ் நடிகர் ஜீவா நடிக்கிறார்.இந்தப் படத்தில் கபில்தேவ் மகள் அமியா தேவ் (Amiya) உதவி இயக்குனராக பணியாற்றுகிறார்.
இந்நிலையில் தற்போது தர்மசாலாவில் அவர்களுக்கு பயிற்சி நடைபெற்றுவருகிறது. அதில் கபில்தேவ் , பல்வீந்தர் சிங்க் சாந்து , மதன்லால் கலந்து கொண்டு அவர்களின் உலகக்கோப்பை அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த புகைப்படங்களை வெளியிட்டு நடிகர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.