
ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் ஆஷிபா என்ற 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன், தனது டுவிட்டர் பதிவில் சிறு ஆஷிபாவின் வன்கொடுமை கொலை குறித்து கோபாவேசமாக பதிவிட்டுள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,
இந்த வலியை புரிந்துகொள்ள நமது சொந்த மகளாகத்தான் இருக்க வேண்டுமா? அந்த சிறுமியும் எனது மகள்தான். ஒரு ஆணாக, தந்தையாக, குடிமகனாக ஆசிஃபாவிற்கு நடந்த சம்பவத்திற்காக கோபம் கொள்கிறேன்.
என்னை மன்னித்துவிடு குழந்தையே.. உனக்கு தேவையான பாதுகாப்பை கொடுக்க தவறிவிட்டோம். இனியொரு குழந்தைக்கு இந்த கொடுமை நிகழாமல் இருக்க உனக்கு நீதி கிடைக்க போராடுவேன் என கமல் பதிவிட்டுள்ளார்.
நேற்று இரவு டில்லி இந்தியா கேட் பகுதியில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]