செரம் பாகியம்
இந்தோனேசிய நாட்டில் ஒரு படகு கவிழ்ந்ததில் 8 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தோனேசிய நாட்டின் கிழக்கு மலுகு மாகாணத்தில் உள்ள செரம் பாகியம் பராட் ரீஜென்சிக்கு அருகில் உள்ள கடலில் 30 பயணிகளுடன் சென்ற விரைவு படகு நீரின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருந்த மரத்துண்டில் மோதி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ளவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்
மீட்புக்குழுவின் தலைவர் முகமது அராபா, ”
உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில், படகு ரீஜென்சியில் உள்ள துறைமுகத்தில் இருந்து மாகாண தலைநகரான அம்பன் நகருக்கு புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்து ஏற்பட்டது
என்று தெரிவித்துள்ளார்.