சென்னை: தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம் தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான காலஅவகாசம் நாளை (டிசம்பர் 14ந்தே) உடன் முடிவடைய உள்ளது. இதற்கிடையில், எஸ்ஐஆர் பாரம் பதிவேற்றுவதில் பல்வேறு குளறுடிகள் இருப்பதாக, எஸ்ஐஆர் பணிகளை மேற்கொண்டு வரும் அரசு அலுவலகங்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இவர்களுக்கு மேலே உள்ள தேர்தல் அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் இதுதொடர்பான சரியான மற்றும் முறையான பயிற்சி பெறாததால், பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம் செய்வதில் பல குளறுடிகள் காணப்படுகிறது. அதுபோல பல இடங்களில் கட்சியினரின் வலியுறுத்தல் காரணமாக, இறந்தவர்கள், இடம் மறி சென்றவர்கள் என பலரது படிவங்களும் பதிவேற்றம் செய்ய கட்டாயப்படுத்துவதால், அதை பதிவேற்ற வேண்டிய சூழலில் தேர்தல் பணியாளர்கள் உள்ளனர்.
ஆனால், இதுபோன்ற படிவங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து, தவறான தகவல் என சுட்டிக்கட்டி திரும்பிவிடுகிறது. அந்த படிவங்களை சரிபார்த்து மீண்டும் அனுப்பும்படி கூறப்படுகிறது. இதனால், படிவங்களை பதிவேற்றுவதில் பல சிக்கல்கள் எழுந்துள்ளன.
பல இடங்களில் எஸ்ஐஆர் படிவங்கள் பதிவேற்றம் செய்யும் பணி ஏற்கனவே முடிந்த நிலையில், அடுத்தடுத்து, படிவங்கள் திருப்பி அனுப்பப்பட்டு பிழைகள் சரிசெய்யப்பட்டு பதிவேற்ற அறிவுறுத்தப்படுகிறது. இன்று மீண்டும் பதிவேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பதிவேற்றும் பணி நாளையுடன் முடிவடையக் கூடிய சூழலில், இறந்தவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள், இரட்டை வாக்குகள் வைத்திருப்பவர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் முறையான ஆவனங்கள் இன்றி படிவங்கள் கொடுத்த தகுதிவாய்ந்த வாக்காளர்களும் நீக்கப்படலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம் தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என அச்சம் தெரிவித்துள்ளார்.
தகுதியான வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபடுவோம் என்றும் தி.மு.கமேலும், டிசம்பர் 19-ஆம் தேதிக்கு பிறகு எஸ்.ஐ.ஆர் பணிகள் குறித்த முழு விவரங்கள் தெரிய வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
.திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் களத்தில் இருந்து கட்சி சார்பின்றி SIR பணிகளில் ஈடுபட்டனர். அது ஓரளவிற்கு நிறைவு பெற்றுள்ளது. திமுக காரணமாக, தேர்தல் ஆணையத்தின் SIR மூலமாக 80 முதல் 85 சதவிகித வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. எவ்வளவு பேர் நீக்கப்பட்டுள்ளார்கள் என்பது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பின் தெரிய வரும். சுமார் 85 லட்சம் வாக்குகள் நீக்கப்படலாம் என கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மையென்று புள்ளி விவரங்களோடு வந்தால் தான் தெரியும் என்றார்.
மேலும், டிசம்பர் 19ஆம் தேதி வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலை பார்த்த பின்னர் மேலும், கவனமாக செயல்பட வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு உள்ளது. இதனை பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கும் சொல்லி இருக்கிறோம். இதன்பின் நீக்கப்பட்டவர்கள் யார் யார் என்பதை ஆராய்ந்து அவர்களுக்கான வாக்குகளை உறுதி செய்ய அறிவுறுத்தி இருக்கிறோம் என்றார்.
இந்தியாவிலேயே SIR வேண்டும் என்று நீதிமன்றம் சென்ற ஒரே கட்சி அதிமுக தான். அதிமுகவில் இருந்து சிலர் திமுகவுக்கு செல்லலாமா, நடிகர் கட்சிக்கு செல்லலமா என்ற மனநிலையில் இருக்கிறார்கள். எதன் அடிப்படையில் வாக்குச்சாவடி உயர்த்தப்பட்டது என்பது தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்படும். அதனை சட்டத்துறை பார்த்துக் கொள்வோம்.
லோக்சபா தேர்தலின் போது பிரதமர் மோடி 8 முறை வந்தார். அமித்ஷா அடிக்கடி வந்தார்.. எங்களுக்கு முழு தொகுதியும் கிடைத்தது. அதனால் அமித்ஷா மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி இங்கேயே இருக்க வேண்டும். அப்போதுதான் திமுக 202 தொகுதிகளில் வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.