முலுகு

காவல்துறையினர் நட த்திய என்கவுண்டரில் 7 தெலுங்கானா மாவோயிஸ்டுகள் மரணம் அடைந்துள்ளனர்.

கடந்த வாரம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முலுகு மாவட்டத்தில் காவல்துறை இன்பார்கள் என சந்தேகித்து பழங்குடியினர் சமுதாயத்தைச் சேர்ந்த 2 பேரை மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொன்றனர்.

ர்ம்ச்ப்ர்ர் அங்குள்ள மாவோயிஸ்டுகளை பிடிக்க சல்கபா வனப்பகுதியில் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இன்று காலை 5.30 மணியளவில் மாவோயிஸ்டுகள் மற்றும் காவல்துறையினரிடையே துப்பாக்கி சண்டை வெடித்தது.

அப்போது நடந்த என்கவுண்டரில் 35 வயதான பத்ரு என்ற மாவோயிஸ்டு கமிட்டி தலைவர் உள்பட 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.