இஸ்ரேல் மீது லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பு நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டனர்.
இன்று நடைபெற்ற இந்த ராக்கெட் தாக்குதலில் வெளிநாட்டைச் சேர்ந்த 4 பேர் பலியானதாகக் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் மெடுலா நகர் மீது குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த 3 பேர் மற்றும் நான்கு தாய்லாந்து பிரஜைகள் உயிரிழந்தனர்.
ஹிஸ்புல்லாவின் இந்த கொலைவெறி தாக்குதல் இதுவரை இல்லாத அளவு மிகவும் மோசமான தாக்குதலாக இருந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
லெபனான் எல்லையை ஒட்டிய வடக்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட இந்த ராக்கெட் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் அனைவரும் பொதுமக்கள் என்றும் விவசாய நிலங்களின் மீது இந்த தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது.