சென்னை:
மிழ்நாட்டில் 15-18 வயது வரையுள்ள சிறார்களில் 67.25% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 100 சதவீதம் அனைவருக்கும் தடுப்பூசி போடும் வகையில், தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்த வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மெகா தடுப்பூசி முகாம் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது .

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 16.25 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 12 மாவட்டங்களில் 90 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் இதுவரை மொத்தமாக 9 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் 15-18 வயது வரையுள்ள சிறார்களில் 67.25% பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.