ஹரித்வார்
ஹரித்வாரில் உள்ள மானசாதேவி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிர்ழந்துள்ளனர்.

நேற்று காலை உத்தராகண்டின் ஹரித்வாரில் உள்ள மானசா தேவி கோயிலுக்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர் இது குறித்து . சட்டம்-ஒழுங்கு ஐ.ஜி. நிலேஷ் பர்னே தகவலின்படி, 9 மணியளவில் பக்தர்கள் கோயிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மின்சாரக் கோளாறு குறித்து வதந்தி பரவியது, அது பக்தர்களிடையே பீதியை ஏற்படுத்தி இந்தச் சூழ்நிலைக்கு வழிவகுத்தது. காரணங்களை நாங்கள் விசாரித்து வருகிறோம், மீட்புப் பணிகள் நடந்துவருகின்றன என்று கூறப்படுகிறது.
தற்போது, சாவன் (Sawan) மாதத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், மாநிலத்தில் கோயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மானசா தேவி கோயில், சாலையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பில்வா பர்வத் (Bilwa Parwat) மலை உச்சியில் அமைந்துள்ளது.
இக்கோயிலை ரோப்வே (Ropeway), படிக்கட்டுகள் வழியாக அடையலாம். இந்தச் சம்பவம் படிக்கட்டுகளில் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.டி.ஆர்.எஃப் (SDRF) அதிகாரி ஒருவர், ஞாயிற்றுக்கிழமை கோயிலில் கூட்டம் அதிகமாக இருந்தாலும், மின்கம்பியில் கோளாறு பற்றிய வதந்தியால் நிலைமை மேலும் மோசமடைந்தது என்றார். கூட்ட நெரிசல் குறித்த தகவல் கிடைத்தவுடன், மூன்று மீட்புப் படை அணிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக எஸ்.டி.ஆர்.எஃப். தெரிவித்துள்ளது