நெட்டிசன்:
திடீரென 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்ததில் இருந்து நாடே அமளிதுமளியாகிக்கொண்டிருக்கிறது. பிரதமர் அறிவித்தபோது பாராட்டிய பலரும், தற்போது கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால் பிரதமரின் அறிவிப்பை பாராட்டுபவர்களும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், மனோதத்துவ மருத்துவர் ஆனந்தன் பன்னீர்செல்வம் (Anandhan Panneerselvam ) தனது முகநூல் பதிவில், “மோடியின் செல்லாது அறிவிப்பை எதிர்ப்வர்கள், மனஊனம்(personality disorder) உடையவர்கள். கோழைகள் “ என்று பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவு:
“பத்து 1000,500 ரூபா நோட்டுகள் கூட கையிருப்பு இல்லாமல், ஏழைகள் பாதிக்கபடுகிறார்கள் அன்றாடம் காய்ச்சிகள் அலைகிறார்கள் ” என பதிவிடுபவர்கள் மனஊனம்(personality disorder) உடையவர்கள். கோழைகள். பில்டிங் ஸ்ட்ராங்கு பேஸ்மண்ட் வீக்கு வகையறாக்கள்
இவர்களுடன் வாதம்/விவாதம் வேண்டாம் நண்பர்களே!
கருணாநிதி / ப. சிதம்பரம் வகையறா ஆட்கள் எதிர்ப்பதில் அர்த்தம் இருக்கிறது.
இந்த வகையறா ஆட்கள் உருவாக அடிப்படை காரணமாக இருந்த அந்த கோழைகள், அறிவு ஜீவி போலிகள் ………
“ஆமாண்டா! இப்படியெல்லாம் செஞ்சா மோடி மீண்டும் பிரதமராயிடுவான்டா!…..அது நாட்டுக்கு நல்லது இல்லைடா. மதவாதம் வந்துடும்டா “……அப்டீன்னு தைரியமா சொல்லுங்களேன்
ஏன் ஏழைகள்/கூலிகள்/ உழைப்பாளர்கள்
என கேடயத்தை தூக்கி கொள்கிறீர்கள்.
#பாஜக வின் துணிச்சலான நல்ல முடிவு
#மோடி the great
பின்குறிப்பு: வேற்றுமையில் ஒற்றுமையுடன் பல மதங்களை சேர்ந்த மக்கள் வாழும் இந்தியாவில் #Hராஜா
#அர்ஜுன் சம்பத் வகையறா நபர்களின் பேச்சுகள், நடவடிக்கைகளை கண்டு குமட்டுபவன் நான்.
Common sense உள்ளவர்களுக்கு என் எண்ணம் புரியும்
#ஜெயகாந்தன்
இந்தியா “ஒருமத சார்பற்ற நாடு ”
பல மதங்களுக்கு இந்தியாவின் மீது சார்பு உண்டு.
#புத்தம் #இஸ்லாம் #கிருஸ்துவம் #சீக்கியம் ofcourse #இந்துமதம்
இன்னும் பல மதங்கள்……” – இப்படி பலவித எண்ணங்களை தனது ஒரே பதிவில் வெளிப்படுத்தியிருக்கிறார் மனநல மருத்துவர் ஆனந்தம் பன்னீர்செல்வம்.
..