பெண்ணிடம் இருந்து வந்த அழைப்பை நம்பி டேட்டிங் சென்ற நபரை மர்ம கும்பல் கடத்தி வைத்து ரூ. 3 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

ஒரு பெண் உள்ளிட்ட 3 பேர் கைது

உ.பி. மாநிலம் லலித்பூரைச் சேர்ந்த லல்லு என்ற 50 வயது நபருக்கு வந்த அழைப்பை நம்பி செல்போனில் பேசிய பெண்ணுடன் டேட்டிங் செய்ய ஜான்சி நகர் சென்றார்.

‘ஹனிட்ராப்’பில் சிக்கிய அவரை கடத்திய மர்ம கும்பல் அவரை விடுவிக்க ரூ. 3 லட்சம் வேண்டும் என்று கூறி அவரது குடும்பத்தினரை மிரட்டியுள்ளனர்.

ரூ. 1 லட்சம் முன்பணமாக கொடுத்த நிலையில் லல்லுவின் மகன் காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து மர்ம கும்பலை பிடிக்க காவல்துறையினர் ரகசிய ஆபரேஷன் மேற்கொண்டனர்.

இதில் ஒரு பெண் உள்ளிட்ட மூன்று பேர் பிடிபட்ட நிலையில் லல்லுவை போலீசார் மீட்டனர்.

‘ஹனிட்ராப்’ முறையில் இந்த கும்பல் ஏற்கனவே பலரிடம் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டது பிடிபட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.