வெலிங்டன்: நியூசிலாந்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது.

அந்நாட்டின் ஆக்லாந்து தீவுகளில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.8 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தெற்கே பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. எனினும் நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் இல்லை.