டெல்லி

மாசு அதிகரிப்பால்  டெல்லியில் 40% மக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளது.

தற்போது தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருகிறது.  இதனால் தீபாவளிக்கு பிறகு காற்று மாசு பாதிப்பு குறித்து உள்ளூர் வட்டாரக்குழுவால் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் மாசு பாதிப்பு மக்களிடத்தில் எப்படி உள்ளது, அவர்கள் மாசு தொடர்பான பிரச்சினைகளுக்காக ஆஸ்பத்திரிகளுக்கு சென்றார்களா? என்பது பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன.

நேற்று வெளியிடப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகளின்படி கடந்த 3 வாரங்களில் 40 சதவீத குடும்பத்தினர் மாசு பிரச்சினைகளால் மர்த்துவமனைகளுக்கு சென்று வந்தது கண்டறியப்பட்டு உள்ளது.

அதன்படி 10-ல் 4 குடும்பத்தினர் சுவாசக்கோளாறு, இருமல், சளி, காய்ச்சல் போன்ற உடல்நல பிரச்சினைகளுக்காக மருத்துவமனைகளுக்கு சென்று வந்துள்ளனர்.