கோவை: பாலக்காடு அருகே கேரளா எக்ஸ்பிரஸ் மோதி தமிழகத்தை சேர்ந்த 4 தொழிலாளிகள் பலியாகி உள்ளனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாலக்காடு அருகே ஷோரனூர் ரயில் பாலத்தில் சென்றுகொண்டிருந்த 4 பேர், அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தூக்கி விசப்பட்டு பலியாகினர்.  விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இந்த விபத்தில் 3 பேர் உடல் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில்,  ஒருவரைன் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. விபத்தின்போது, அவர்கள்  மேம்பாலத்தில் துப்புறவு பணிகளில்  ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இறந்த 4 பேரில்  ஒருவரது உடலை காணவில்லை என்று கூறப்படுகிறது.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே பாரதபுழா ஆற்றின் மேல் அமைந்துள்ள ஷோரனூர் ரயில் பாலத்தில் இன்று (நவம்பர் 2) மாலை இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என  4 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.அவர்களில் தமிழர்களும் அடங்குவர். ரயில்வே தூய்மை பயணியாளர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ரயில் பாலத்தில் தொழிலாளர்கள் நடந்து சென்று கொண்டிருந்த போது திடீரென கேரளா எக்ஸ்பிரஸ் ரயில் வேகமாக வந்துள்ளது. உடனடியாக  அவர்களால், தண்டவாளத்தில் இருந்து வெளியேற முடியவில்லை. பாலத்தின் மறுமுனைக்கு செல்வதற்குள் ரயில் அருகில் வந்துவிட்டது. இந்நிலையில் தொழிலாளர்கள் மீது ரயில் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

விபத்தில் தொழிலாளர்கள் ஆற்றில் தூக்கி வீசப்பட்டனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 4 தொழிலாளர்கள் பலியாகினர். மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், ஒருவரது உடலை காணவில்லை என்று கூறப்படுகிறது. ரயில் மோதி உயிரிழந்த 4 பேரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒப்பந்த ஊழியர்கள் என தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் வள்ளி, ராணி, லக்‌ஷ்மண் ஆகியோர் மூவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொருவரின் உடலை காணாததால் யார் என்று தெரியவில்லை. உயிரிழந்த 4 பேரும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக பணியாற்றி வந்துள்ளனர். கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலை பொறுத்தவரை ஷோரனூர் ரயில் நிலையத்தில் நிற்காது. எனவே அப்பகுதியில் மிக வேகமாக பயணம் செய்துள்ளது. இந்த அதிவேகம் தான் பெரிய விபத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது.

ஷோரனூர் ரயில் பாலத்தில் பாதுகாப்பாக நிற்பதற்கு போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ரயில் திடீரென வரும் போது ஓரமாக ஒதுங்கி நிற்கும் வகையில் சதுர வடிவில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே அந்த இடத்திற்கு தொழிலாளர்கள் ஏன் செல்லவில்லை என்ற சந்தேகம் எழுகிறது. அப்படியெனில் விபத்து ஏற்பட்டது எப்படி என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் தொழிலாளர்கள் மிகவும் கவனக்குறைவாக செயல்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.