டெல்லி

டெல்லி விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து வ்ழுந்ததால் 4 பேர் காயம் அடைந்துள்ளனர்.

தற்போது டெல்லியில் கனமழை பெய்து வருகிறது. இங்கு இரவு முழுவதும் பெய்த தொடர் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி ஆங்காங்கே மழைநீர் தேங்குவதால் டெல்லி நகரம் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இங்குள்ள சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ள தண்ணீரில் வாகனங்கள் சிக்கியதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.  டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ல் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது.

தர்போது கனமழை காரணமாக மேற்கூரை இடிந்து விழுந்ததில் நிறுத்தி வைத்திருந்த கார்கள் பலத்த சேதமடைந்து 4 பேர் காயமடைந்தனர்.  காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி விமான நிலையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து 4 பேர் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.