சென்னை: புதிய தலைமைச்செயலாளராக சிவ்தாஸ் மீனா பொறுப்பேற்ற பிறகு ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட உயர் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். இதுவரை 4 முறை ஏராளமான ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 5வது முறையாக 4ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழக தலைமைச்செயலாளராக இருந்த இறையன்பு ஜூன் மாதத்துடன் ஓய்வுபெற்ற நிலையில், புதிய தலைமைச்செயலாளராக சிவ்தாஸ்மீது ஐஏஎஸ் பொறுப்பேற்றார். இவர் பதவி ஏற்ற பிறகு,. பல்வேறு துறைகளில் பல்வேறு மட்டத்தில் அதிகாரிகள் மாற்றம் அதிரடியாக நடைபெற்று வருகிறது. ஏற்கனெவே நான்கு முறை நடைபெற்ற அதிகாரிகள் மாற்ற உத்தரவில் 33 அதிகாரிகள் பணியிட மாற்றம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் தற்போது நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளை மாற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது. தெலும் சில ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதலாக சில தற்காலிகப் பொறுப்புகளையும் வழங்கி வருகிறார்
இது அதிகாரிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், நிர்வாக வசதிக்காகவும், எந்த துறை பொறுப்பை யாருக்கு வழங்கினால் சிறப்பாக செயல்படுவார்களோ அதை ஆராய்ந்தே அதிகாரிகள் மாற்றப்படுவதாக கூறியுள்ளனர்.
இந்த பரபரப்புக்கு மத்தியில் தற்போது 4 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
கோயம்புத்தூர் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக பதவி வகிக்கும் தேவ் ராஜ் ஐஏஎஸ், அறிவியல் நகரத் திட்டத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு இணைச் செயலாளரான ஆகாஷ் ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகத்தின் சிப்காட் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசின் மாநில தொழில்கள் மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்த நிஷாந்த் கிருஷ்ணா ஐஏஎஸ், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (MSME) துறைச் செயலாளராக உள்ள அருண் ராய் ஐஏஎஸ், உலக முதலீட்டாளர்கள் மாநாடு சிறப்பு அதிகாரியாக கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளார்.