சதுரகிரி
பக்தர்கள் பவுர்ணமி பூஜைக்காக சதுரகிரி கோவிலுக்கு செல்ல 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் உள்ளது. இங்கு மாதம் தோறும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்கள் மட்டுமே பக்தர்கள் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது
சதுரகிரி கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டுக்காக வருகிற 13-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் அனுமதி அளித்து உள்ளனர்.
மலைப்பகுதியில் பக்தர்கள் இரவில் தங்க்ச் அனுமதி கிடையாது. மேலும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லக்கூடாது. சாமி தரிசனம் முடித்தவுடன் தாணிப்பாறை அடிவாரப் பகுதிக்கு இறங்கிவிட வேண்டுமென வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.