பெங்களூரு: அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய 30 வயது பெண் பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சமா பர்வீன், இந்தியாவில் ‘அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் மூளையாக’ இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தியாவில் அல்காய்தா தீவிரவாத அமைப்பின் சித்தாந்ததை விதைக்கும் நோக்கில் முஸ்லிம் இளைஞர்களைத் தூண்டிவிட்டு இந்திய அரசுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவதாக குஜராத் தீவிரவாத ஒழிப்பு படைக்கு மின் அஞ்சல் வந்தது. இதையடுத்து சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.
இந்த குழுவினர் கடந்த வாரத்தில் அகமதாபாத்தை சேர்ந்த ஃபர்தீன் ஷேக் (24) உள்ளிட்ட நால்வரை கைது செய்தனர். இந்த நால்வரிடமும் தனித்தனியாக நடத்தப்பட்ட விசாரணையில் நாட்டில் அல்காய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய வேறு சிலரின் பெயர்களும் கிடைத்தன. அதன் அடிப்படையில் குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படையினர் பெங்களூருவை சேர்ந்த சாமா பர்வீன் (30) என்பவரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
அவர் அல்கொய்தா எனப்படும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சாமா பர்வீன் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
ஏற்கனவே அல்கொய்தா பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பவர்களை என்ஐஏ தேடிதேடி அழித்து வருகிறது. கடந்த ஆண்டு இந்தியாவில் தடை செய்யப்பட்ட அல்கொய்தா அமைப்புக்கு நிதி அனுப்பியது மற்றும் ஆட்கள் சேர்த்தது தொடர்பாக கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த நசீர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் டத்தப்பட்ட விசாரணையில், தமிழகத்தை சேர்ந்த பலர் அல்கொய்தா அமைப்புகளுக்கு நேரடியாக நிதி அனுப்பியதும், வேலை இல்லாத இளைஞர்களை மூளை சலவை செய்து தடை செய்யப்பட்ட அமைப்பில் சேர்த்து தீவிரவாத செயல்களில் ஈடுபட இருந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்து தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 7 மாநிலங்களில் 17 இடங்களில் சோதனை நடத்தி வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.குறிப்பாக தமிழ்நாட்டில் சென்னை ஏழுகிணறு பிடாரியார் கோவில் தெருவில் தங்கி இருந்த ஹாசன் அலி(27) மற்றும் அவருடன் தங்கி இருந்த 5 வாலிபர்களையும் என்ஐஏ அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், பெங்களூரு சிறையில் உள்ள நசீர் வங்கி கணக்கிற்கு துபாயிலிருந்து சென்னைக்கு வந்து சேர்ந்த ஹவாலா பணம் ஒரு லட்ச ரூபாய் ஏடிஎம் டெபாசிட் மிஷின் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. அதைதொடர்ந்து ஹாசன் அலியை என்ஐஏ அதிகாரிகள் மண்ணடி மூர் தெருவில் உள்ள கட்டிடத்தின் 4 வது தளத்தில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தி முக்கிய தகவல்களை பெற்றதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்து தமிழ்ட்டில் ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் உள்ள பருத்திகாரன் தெருவில் உள்ள தமீமுல் ஆசில்(23) மற்றும் கீழக்கரை புதுத்தெரு பகுதியில் வசித்து வரும் அல் முபீத்(28) என்பவருக்கு சொந்தமான வீட்டில் நேற்று பெங்களூருவில் இருந்து வந்த என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இதில் தடை செய்யப்பட்ட அல்கொய்தா அமைப்புக்கு சட்டவிரோதமாக நிதி அனுப்பிய ஆவணங்கள், அல்கொய்தா அமைப்பின் தளபதிகளுடன் பேசிய குறிப்புகள் மற்றும் லேப்டாப், பென் டிரைவ், 6 சிம்கார்டுகள், மெமரி கார்டு ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து இவர்களின் நெட்வொர்க்குகள் கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், பெங்களூருவில் இளம்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.