சென்னை: அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏப்ரல் 6ம் தேதி நடக்க உள்ள தமிழக சட்டசபை தோ்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தமாகா கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு கூட்டணியும் இறுதி செய்யப்பட்டு விட்டது.

அதை தொடா்ந்து, பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இடைத்தோ்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தேமுதிக, தமாகா ஆகிய இரு கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து தொடா்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விரைவில் தொகுதி ஒதுக்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது. அதன் பின்னர், தேமுதிகவுடனான தொகுதிப் பங்கீடு இறுதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.