சென்னை:

துரை மாவட்ட கலெக்டர் உள்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகளை  இடமாற்றம் செய்து  தமிழகஅரசு  உத்தரவிட்டு உள்ளது.

இதுதொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்பு பயிற்சி மைய இயக்குநராக எஸ். நாகராஜன் நியமிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மதுரை கலெக்டர் நாகராஜ்

லோக்சபா மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலின்போது, மதுரை மாவட்ட கலெக்டராக நாகராஜன் நியமனம் செய்யப்பட்டார். முன்னதாக அவர்  சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்தார். தற்போது வேறு துறைக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

அதுபோல  கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி எம். பாலாஜி, பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளராகவும்,  கூடுதல் தலைமை தேர்தர் அதிகாரி வி.ராஜாராமன், நகரம் மற்றும் கிராம திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

மதுரை மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார் , மாவட்ட ஆட்சியர் பொறுப்பை மறு உத்தரவு வரும் வரை கவனிப்பார் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.