மதுரை
மதுரை நகரில் வரும் 27, 28 மற்றும் 29 தேதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படுகின்றன.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் =சுதந்திர போராட்ட வீரர்களான மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் குருபூஜை நாளை நடைபெறுகிறது. தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா, குருபூஜை வருகிற 30-ந்தேதி நடைபெறுகிறது.
இவ்விழாக்களில் தமிழக அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அரசியல் கட்சி தலைவர்கள், சமுதாய அமைப்பினர்கள், பொதுமக்கள் என சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்து வருகின்றனர்.
, மருதுபாண்டியார் நினைவு தினம் மற்றும் தேவர் ஜெயந்தி விழாயை முன்னிட்டு மதுரையில் வருகிற 27, 28, 29 ஆகிய 3 நாட்களுக்கு மதுக்கடைகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மனமகிழ் மன்றங்கள், தனியார் பார் உள்ளிட்டவைகளும் 3 நாட்கள் மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.