ஆண்டிகுவா: விண்டீஸ் அணிக்கெதிரான 2வது ஒருநாள் போட்டியில், முதலில் களமிறங்கிய இலங்கை அணி, 50 ஓவர்களில், 8 விக்கெட்டுகளை இழந்து 273 ரன்களை சேர்த்தது.

இதன்மூலம், இத்தொடரை வெல்ல விண்டீஸ் அணிக்கு 274 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியை விண்டீஸ் அணி வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

டாஸ் வென்ற விண்டீஸ் முதலில் பந்துவீச முடிவெடுத்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணியின் துவக்க வீரர் தனுஷ்கா குணதிலாக 96 பந்துகளில் 96 ரன்களை அடித்தார். தினேஷ் சந்திமால் 71 ரன்களை சேர்த்தார். ஹசரன்கா 47 ரன்களை அடிக்க, 50 ஓவர்களில் 273 ரன்களை சேர்த்தது அந்த அணி.

விண்டீஸ் தரப்பில் ஜேசன் முகமது 3 விக்கெட்டுகளையும், அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.