சென்னை:

டந்த 4ஆண்டுகளில் 295பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை கவர்னர் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து 4 நாட்கள் மட்டுமே கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அறிவித்த நிலையில், இன்றுடன் கூட்டத் தொடர் முடிவடைகிறது.

இந்த நிலையில், சட்டமன்ற கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், கடந்த  2016 முதல் 2019 வரை 295 நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

மேலும்,  குறைந்த பட்சம் 50 மாணவர்கள், 3 ஏக்கர் நிலம், ரூ.1 லட்சம் நிதி இருந்தால் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்றும் கூறினார்.

தி.மு.க. உறுப்பினர் வாகை சந்திரசேகர் வேளச்சேரி காந்தி சாலையில் உள்ள நுழைவாயிலை அப்பகுதி மக்கள் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு செல்வதற்காக பல ஆண்டுகளாக பயன்படுத்திவந்தனர்.ஆனால், அந்த கேட்டை ஐஐடி நிர்வாகம் மூடியதல், பொதுமக்கள் சுமார்  3 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதாகவும், அதனை திறக்க அரசு நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

அதற்குப் பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன், முதலமைச்சர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சருடன் கலந்து ஆலோசித்து, மத்திய அரசின் உத்தரவை பெற்று மூடப்பட்ட நுழைவாயிலை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.