சென்னை: தடையை மீறி புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக சென்னையில் 269 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக மாநகர காவல்துறை தெரிவித்து உள்ளது.

பொதுவாக சென்னைவாசகிள் புத்தாண்டை மெரினா கடற்கரையில் கொண்டாடுவது வழக்கம். ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, மெரினாவில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டது. மேலும்,  புத்தாண்டை கொண்டாட இரவு நேரங்களில்  மக்கள் சாலைகளில் வலம் வருவதை தடை செய்யும் பொருட்டு சென்னையில் இன்று இரவு முழூவதும் 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.சென்னையில் இரவு 12 மணி முதல் அனைத்து மேம்பாலங்களும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டன.  இதனால் மெரினா சாலை உள்பட பல சாலைகள் வெறிச்சோடி கானப்பட்டன.

இந்த நிலையிலும் சிலர் விதிகளை மீறி வாகனத்தில் செல்வதை தடுக்க  சென்னையில் நேற்று  இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இருந்தாலும்  தடையை மீறி ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 269 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், மேலும், மது போதையில் வாகனம் ஓட்டியதாக 147 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் போக்குவரத்து காவல்துறை தெரிவித்து உள்ளது.