டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,499 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளதுடன், சிகிச்சை பலனின்றி  255 பேர் உயிரிழந்துள்ளனர். அதே வேளையில் சிகிச்சையில்  இருந்து 23,598 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம் இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும்  புதிதாக 11,499 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,29,05,844-ஆக உயர்ந்தது.

நேற்று மட்டும் சிகிச்சை பலனின்றி மேலும் 255 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம், மொத்த உயிரிழப்பு  5,13,481 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.20% ஆக குறைந்துள்ளது.

கடந்த 24மணி நேரத்தில், கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில்  23,598 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், மொத்த  குணமடைந்தோர் எண்ணிக்கை 4,22,70,482 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.52% ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் 1,21,881 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.28 % ஆக குறைந்துள்ளது.

இந்தியாவில்  நேற்று ஒரே நாளில் 28,29,582 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 1,77,17,68,379 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் 11,36,133 மாதிரிகளை சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை 76,57,35,314* மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.