டெல்லி: இந்தியாவிலிருந்து 15 நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு நிலையில் மேலும் 22 நாடுகள் கோரிக்கை விடுத்து உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந் நிலையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடரின் மக்களவைக் கூட்டம் தொடங்கியது.

அதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேசியதாவது: இது வரை 22 நாடுகளிடமிருந்து கொரோனா தடுப்பூசிக்கான கோரிக்கைகளை நாங்கள் பெற்றுள்ளோம்.

அவற்றில், 15 நாடுகளுக்கு ஏற்கனவே தடுப்பூசி வழங்கப்பட்டு இருக்கிறது. 56 லட்சம் தடுப்பூசிகள் மானிய உதவியாகவும், 1.05 கோடி தடுப்பூசிகள் ஒப்பந்த முறையிலும் வழங்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.