டெல்லி: நாடு முழுவதும் இயக்கப்பட்டு வரும் பயணிகள் ரயில், எக்ஸ்பிரஸ் போன்றவைகளில், கடந்த ஐந்து ஆண்டுகளில் பொது, முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிகளில் 2,187 கோடி பேர் பயணம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக 2024-25ல் 651 கோடி பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்திய இரயில்வே (Indian Railways) இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இது உலகிலுள்ள மிகப்பெரிய தொடர்வண்டி வலையமைப்புகளில் ஒன்றாகும். இந்திய இரயில்வேயில் ஆண்டுக்கு 500 கோடி மக்கள் பயணிக்கின்றனர்; ஆண்டுக்கு 35 கோடி டன் சரக்கானது இடம் பெயர்க்கப்படுகிறது; 12.54 இலட்சம் பணியாளர்கள் இதில் பணிபுரிகின்றனர்.
பொதுப் பெட்டிகளில் அடிப்படை வசதிகளான முறையான காற்றோட்டம், சுத்தமான கழிவறைகள், குடிநீர் வசதி மற்றும் இருக்கை வசதிகள் பற்றாக்குறையாக உள்ளன. இது பயணிகளுக்கு, குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோருக்கு பயணத்தை மிகவும் சிரமமாக்குகிறது. இருந்தாலும், டிக்கெட் விலை குறைவு என்பதால், ஏழை நடுத்தர வர்க்கத்தினர், பொதுப்பெட்டிகளையே அதிக அளவில் விரும்புகிற்னர். சில மணி நேரங்கள் கஷ்டப்பட்டாலும், குறிப்பிட்ட நேரத்தில் தாங்கள் விரும்பும் பகுதியை அடைய முடியும் என்ற நம்பிக்கையில் ரயில் பயணத்தை பெரும்பாலோர் விரும்புன்றனர்.
இந்த நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகளில், பொதுப் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. 2020-21 முதல் 2024-25 வரையிலான காலகட்டத்தில், நாடு முழுவதும் 2,187 கோடி பயணிகள் ரயில்களின் பொதுப் பெட்டிகள் மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணித்து இருப்பதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.
பொதுப் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் அதிகரித்து, ரயிலின் முன்பதிவிள்ளாத பொதுப்பெட்டிகளில் கடுமையான நெரிசலை ஏற்படுத்தியுள்ளது. 2020-21 முதல் 2024-25 வரையிலான காலகட்டத்தில், 2,187 கோடி ரயில் பயணிகள் பொதுப் பெட்டிகள் மற்றும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணித்துள்ளனர், இது வசதிகளின் பற்றாக்குறையை எடுத்துக்காட்டுகிறது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், கோவிட் பாதிப்பு நிறைந்த 2020-21ம் ஆண்டில் 99 கோடி பயணிகள் பயணித்தனர். மேலும் 2021-22ம் ஆண்டில் இது 275 கோடியாக உயர்ந்தது. இது தொடர்ந்து 2022-23ம் ஆண்டில் 553 கோடி, 2023-24ம் ஆண்டில் 609 கோடி, மற்றும் 2024-25ம் ஆண்டில் 651 கோடியாக உயர்ந்துள்ளது. முழுமையாக குளிர்சாதன வசதி இல்லாத அம்ரித்பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகப்படுத்தப்பட்டது. 14 சேவைகள் இயக்கப்படுகிறது. இருப்பினும், இந்த ரயில்கள் பயணிகளின் நெரிசலை குறைப்பதற்கு போதுமானதாக இல்லை. மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் 22 பெட்டிகளில் 12 பொதுப் பெட்டிகள் மட்டுமே உள்ளன. இது பயணிகளுக்கு போதிய இடவசதி இல்லாத நிலையை உருவாக்குகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையின், அதனால் ஏற்படும் நெரிசல் மற்றும் பயண அசவுகரியங்களை அதிகப்படுத்தி இருப்பதாகவும், இதன் காரணமாக தொற்றுநோய்கள் பரவ வாய்ப்பு இருப்பதாகவும் அச்சப்படம அமைச்சர், இதை தவிர்க்க புதிய நடைமுறை விரைவில் அமல்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வேயில் 57,200 பொதுப் பெட்டிகளும், 25,000 குளிர்சாதன பெட்டிகளும் உள்ளன. மொத்தம் 82,200 பெட்டிகள். இதில் 54 லட்சம் நான்-ஏசி இருக்கைகளும், 15 லட்சம் ஏசி இருக்கைகளும் உள்ளன. ஆனால், இந்த இருக்கைகளின் எண்ணிக்கை பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்றவர், 2024 மற்றும் 2025ம் ஆண்டுகளில், ஹோலி போன்ற பண்டிகை காலங்களில் 13,500 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட போதிலும், பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை.
மகா கும்பமேளாவின் போது நாடு முழுவதும் (ஜனவரி 13 முதல் பிப்ரவரி 28 வரை) 17,300 ரயில்கள் இயக்கப்பட்டு 4.24 கோடி பயணிகள் பயணித்தனர். ஆனால், இந்த சேவைகளும் நெரிசலை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்தன என்பதை ஒப்புகொண்டுள்ள அமைச்சர், இந்திய ரயில்வே ஏழைகளுக்கு மலிவு விலையில் பயணிக்க உதவினாலும், பொதுப் பெட்டிகளில் நிலவும் நெரிசல், வசதிக் குறைபாடுகள், சுத்தமின்மை, பாதுகாப்பு பிரச்னைகள் மற்றும் பயண தாமதங்கள் ஆகியவை பயணத்தை சவாலாக்குகின்றன என்பதையும் உறுதிப்படுத்தினார்.
ரயிலில் பயணிக்கும் பணிகளின் சிக்கல்களை தீர்க்க ரயில்வே அமைச்சகம் மேலும் பெட்டிகளை சேர்ப்பது, வசதிகளை மேம்படுத்துவது மற்றும் சிறப்பு ரயில்களை திறம்பட நிர்வகிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானித்து உள்ளதாகவும் கூறினார்.